Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 நவம்பர் 01 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. அவ்வாறு அரசியல் செய்ய வருகின்றவர்களுக்கு அதிபர்களாகிய நீங்கள் இடமளிக்கக்கூடாதென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்; தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அதிபர்களுக்கான கூட்டம், அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் சனிக்கிழமை (31) இரவு நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு பாடசாலைகளில் அரசியல் செய்ய வரும் அரசியல்வாதிகளுக்கு அதிபர்கள் இடமளிக்கக்கூடாது. அதற்கு துணைபோகவும் வேண்டாம். பாடசாலைகளையும் மாணவச் செல்வங்களின் கல்விச் செயற்பாடுகளையும் எந்தளவு தூரம் அரசியல்வாதிகளைக் கொண்டு முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்ல முடியுமோ, அந்தளவு தூரம் இட்டுச்செல்ல அதிபர்கள் முயற்சிக்கவேண்டும்' என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.வாஹிட், அட்டாளைச்சேனை கோட்ட கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி மற்றும் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், மீலாத் நகர், சம்பு நகர், ஆலங்குளம், திராய்க்கேணி பிரதேச பாடசாலை அதிபர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .