Princiya Dixci / 2022 மார்ச் 23 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
பொத்துவில் தாமரைக்குள கிராமத்தில் உட்புகுந்த காட்டுயானை அங்கிருந்த வீடு ஒன்றை, நேற்று (22) இரவு முற்றாக சேதமாக்கியுள்ளது.
அண்மைக் காலமாக பொத்துவில் பிரதேசத்துக்குட்பட்ட சர்வோதையபுரம் மற்றும் செங்காமம் ஆகிய பிரதேசங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதால், அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் இரவு நேரங்களில் பீதியுடன் காணப்படுகின்றனர்.
இதனால் மாலை நேரங்களில் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறி, தமது குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று காலையில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
யானைத் தொல்லையை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வன ஜீவராசி திணைக்களத்தின் அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கேட்டுள்ளனர்.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025