2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

Editorial   / 2017 ஒக்டோபர் 07 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். சபேசன், நடராஜன் ஹரன்

அம்பாறை, மல்வத்தைப்  பகுதியில், வயல் வேலைக்காக சென்ற 60 வயது மதிக்கத்தக்க  நபரொருவர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று (6) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், வீரமுனை 04 பிரதேசத்தைச் சேர்ந்த கந்தையா கணபதிப்பிள்ளை ஆவார்.

இவர்  மல்வத்தையிலுள்ள தனது வயலுக்குச் வீட்டிலிருந்து சென்று,வேலை செய்து கொண்டிருக்கும் போது, காட்டு யானை தாக்கியதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அவரை, சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக, வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .