Janu / 2024 நவம்பர் 18 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில், பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 46 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (18) அதிகாலை ஒரு மணியளவில் கோமாரி காட்டுவெளி பூனைப் போக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான, வயல் காவலுக்கு சென்ற, ஜெயரட்ணம் நவநேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வி.ரி.சகாதேவராஜா

26 minute ago
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
41 minute ago
3 hours ago