Editorial / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, கனகராசா சரவணன்
அம்பாறை, நாவிதன்வெளி மாரியம்மன் கோவிலில் கடந்த 08 வருடங்களுக்கு முன் காணாமல் போன அம்மன் சிலை, அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக, சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2009.11.12ஆம் திகதி கோவிலில் இருந்த மிகவும் பெறுமதியான சிலை ஒன்று காணாமல் போயிருந்ததாக, கோவில் நிர்வாகிகளால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இச்சிலை சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் மாரியம்மன் கோவில் முன் வாசலில் ஞாயிற்றுக்கிழமை (10) நள்ளிரவு வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாவிதன்வெளி மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பூசாரியிடம் இச்சிலை கல்முனை நீதவான் நீதிமனற் நீதவான் ஐ. பயாஸ் றாஸாக்கினால் இன்று (12) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிதாக மாறும் நிர்வாகத்தினரிடம் மற்றும் பூசாரியிடம் இச்சிலை ஒப்படைக்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தால் கோரப்படும் பட்சத்தில் இதனை காண்பிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவுப் பிறப்பித்து சிலையை வழங்கியுள்ளார்.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026