Princiya Dixci / 2022 செப்டெம்பர் 09 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா
கிழக்கு மாகாணத்தில் காணிப் பத்திரங்கள் வழங்கலில் திருக்கோவில் பிரதேச செயலகம் முதலிடம் பெற்றுள்ளது.
இதற்காக கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தசநாயக்க நேரில் விஜயம் செய்து பாராட்டினார்.
அச்சமயம், அங்கு திருக்கோவில் பிரதேசத்தில் காணி ஆவணங்கள் பெற்றுக் கொள்ளாத மக்களுக்கான காணி ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விலும் கிழக்கு மாகாண காணி நிர்வாக திணைக்களத்தின் மாகாணக் காணி ஆணையாளர் டிஎம்ஆர்சி.தசநாயக பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, 362 பயனாளிகளுக்கு காணி ஆவணங்களை வழங்கிவைத்தார்.
2020ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் கிழக்கு மாகாண பிரதேச செயலகங்களில் அதி கூடிய காணி ஆவணங்களை தாயாரித்த பிரதேச செயலகமாக, திருக்கோவில் பிரதேச செயலகம் இருந்ததாக கிழக்கு மாகாண காணி ஆணையாளரால் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், இவ்வாறான மிகச் சிறந்த அடைவை பெற்றுக் கொண்டமைக்காக பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட காணிப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு மாகாண காணி நிர்வாக திணைக்களத்தினால் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இதற்கான முன்னின்று உழைத்த கிராம சேவை உத்தியோகத்தர்களும் பாராட்டப்பட்டனர்.
1 hours ago
8 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
27 Oct 2025