2025 மே 05, திங்கட்கிழமை

காணியை வழங்குமாறு ​கண்டன ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எம்.அறூஸ்

அம்பாறை, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான களியோடைவத்தைக் காணியில், குடியிருப்பவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குமாறு கோரி, பொதுமக்கள், இன்று (30) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், “பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் காணிகளை இழந்த எங்களுக்கு, குடியிருக்க வழிவகை செய்”, “அரச அதிகாரிகளே, எமது காணிகளைச் சூரையாடாதீர்கள்”, “பொதுத் தேவைக்கெனத் தெரிவித்து, காணியைப் பங்கிடாதே”  போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும், பொதுமக்கள் ஏந்திநின்றனர்.

தரிசு நிலமாக பல்கலைக்கழகத்துக்கு அருகாமையிலுள்ள அரச காணியை குடியிருப்பதற்குப் பகிர்ந்து தருமாறும், அங்கு தற்காலிகமாகக் குடியிருப்பவர்களை அகற்றாமல் இருப்பதற்கு ஆவண செய்யுமாறும், இக்காணியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ஒதுக்கி, மீதமாகவுள்ள காணியை குடியிருப்பதற்கு வழங்குமாறு கோரியே, இக்கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் குடியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுத் தம்மிடம் இருப்பதாகவும், இக்காணியில் 10 வருடங்களுக்கு மேலாத் தாம் குடியிருப்பதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X