Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 19 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
காய்ச்சல் இருப்பதையுணர்ந்த தவிசாளர் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்புகொண்டு, அன்டிஜன் செய்யவேண்டி ஆலோசனையைக் கேட்டார்.
அதன்படி சிரேஷ்ட பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சா.வேல்முருகு தலைமையிலான குழுவினர், இன்று (19)அதிகாலை 12 மணியளவில் தவிசாளரது வீட்டுக்கு விஜயம் செய்து அன்டிஜன் சோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது தவிசாளர், அவரது மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து, அவர் குடும்பத்தோடு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரும் அவரது மனைவியும் ஏற்கெனவே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago