Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 நவம்பர் 10 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், சகா, வி.சுகிர்தகுமார்
காரைதீவு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது .
33ஆவது சபை அமர்வின் போது, புதிய ஆண்டுக்ககான பட்ஜெட் அறிக்கை, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில் தலைமையில் இன்று (10) சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, சபையின் தவிசாளர் உள்ளிட்ட 12 உறுப்பினர்களின் பங்களிப்பில் ஏகமானதாக பட்ஜெட் அறிக்கை நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 02 உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - 02, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -01, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -4 ,தோடம்பழம் சுயேட்சை குழு -01 , காரைதீவு சுயேட்சை குழு - 2 என மொத்தமாக 12 உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, சபை நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
“தமிழ் பேசும் மக்கள் இனிவரும் காலங்களில் பிரிந்து நிற்கக் கூடாது. இந்த அரசாங்கத்தில் தமிழ் பேசுபவர்கள் இருந்தால் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது. எனது வேண்டுகோள் யாதெனில் உண்மையான தமிழ்த் தாய்க்கு பிறந்தவர்கள் இந்த அரசாங்கத்தில் இருந்தால், உடனடியாக வெளியேற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்” என இரா. சாணக்கியன் எம்.பி இதன்போது ஊடகங்களுக்குக் கூறினார்.
இதேவேளை, அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கையும், தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் சபை இன்று (10) கூடியபோது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
16 உறுப்பினர்களை கொண்ட இப்பிரதேச சபையில், தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்ட நிதியறிக்கைக்கு, சமூகம் அளித்திருந்த 15 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago