Princiya Dixci / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் இன்று (11) மீட்கப்பட்டுள்ள இந்தச் சடலம், சுமார் 40 முதல் 45 வரையிலான வயது மதிக்கத்தக்கவருடையது எனத் தெரிவித்த பொலிஸார், இந்நபர் கொலைசெய்யப்பட்டு சடலமாக போடப்பட்டுள்ளாரா அல்லது இது இயற்கை மரணமா என விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
56 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
4 hours ago