பைஷல் இஸ்மாயில் / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று மாநகர சபையின் வடக்குப் புறத்தில், பாரியளவிலான காணி அபகரிப்புகளும் அரச காணிகளைக் கையகப்படுத்தும் வேலைகளும், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கரையோரப் பாதுகாப்பு மையம், அக்கரைப்பற்று மாநகர முதல்வரின் கவனத்துக்கு, இன்று (19) கொண்டுசென்றுள்ளது.
இதுதொடர்பில், கரையோரப் பாதுகாப்பு மையத்தின் தலைவர் எம்.எச்.காலித் இம்ரான் கூறுகையில், பாரியளவிலான அரச காணிகளை அபகரிப்பதால், அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தை இழக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில், நகர அபிவிருத்தி அமைச்சு, காணி அமைச்சு, சுற்றாடல்வள அமைச்சு, ஜனாதிபதிச் செயலகம், பிரதமர், நீர்பாசன அமைச்சு, பொலிஸ் தலைமையகம் போன்றவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“கடந்த காலங்களில், அக்கரைப்பற்று மாநகர சபையினுடைய உப்பளமென வர்ணிக்கப்பட்ட நீர் ஏந்தும் பிரதேசமானது, வியாபார நோக்கில் காணி உறுதிகள் தயாரிக்கப்பட்டு, அக்காணிகளுக்கு மண்நிரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனை, குறித்த பிரதேசத்திலுள்ள அரசியல் தலைமைகள், தங்களின் கவனத்திற் கொள்ளாமையால், இதற்கான தீர்வையும் காணமுடியாமல் போனது.
“இதனைத் தீர்க்க, அக்கரைப்பற்று மாநகர முதல்வர், அரசியல் பேதங்களின்றி உடனடியாக, அக்கரைப்பற்று மாநகர சபையினுடைய அரச காணிகளையும் மைதானத்தையும் மீட்டுத்தர வேண்டும். இல்லையெனில், பொதுமக்களும் இளைஞர்களும் ஒன்று திரண்டு, களத்தில் இறங்க வேண்டிவருமெனவும், எமது அமைப்பு எச்சரிக்கை விடுக்கின்றது” என்றார்.


8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago