2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கிரான்கோவை காணியை மீள வழங்க நடவடிக்கை

Editorial   / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில், கிரான்கோவை விவசாய காணியை அதன் உரிமையாளர்களுக்கு மீள வழங்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.

வன இலாகா திணைக்களத்தால் விவசாயம் செய்ய விடாது தடை செய்யப்பட்டுள்ள காணியை மீள பெற்று, அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு கிரான்கோவை விவசாய பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், பொத்துவில் கலாசார மண்டபத்தில் நேற்று (27)  நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

197ஆ6ம் ஆண்டு தொடக்கம் நெற்செய்கை செய்யப்பட்டு வந்த வேளையில் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக காணிகளுக்கு போக முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டது. 1990ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட சமாதாண உடன்படிக்கையின் போது நெற்செய்கை மேற்கொள்ளுமாறு வன இலாகா அதிகாரிகள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட காணி அதிகாரி ஆகியோர் தற்காலிகமாக அனுமதி வழங்கிருந்தனர்.

அதன்படி, அக்காணியில் விவசாயிகள் நெற்செய்கை மேற்கொண்டு வந்துள்ள வேளையில் 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணியில் நெற்செய்கை செய்ய முடியாதெனவும், லகுகல, கித்துலான தேசிய வனப் பூங்காவுக்கு யானைகள் செல்லும் நுழைவாயில் என காரணம் காட்டி வன வரிபாலன இலாகா அதிகாரிகள் திட்டமிட்டு காணிகளுக்குச் செல்லாது தடுத்துள்ளார்கள் என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

502 ஏக்கர் நெற்செய்கைக் காணியில் 250 குடும்பங்கள் ஆண்டான்டு காலமாக வேளான்மைச் செய்கையில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இக்குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X