2025 மே 05, திங்கட்கிழமை

கிராமசக்தித் திட்டங்களுக்கு அட்டாளைச்சேனையில் 9 கிராமங்கள் தெரிவு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக் கருவில் உருவான கிராமசக்தி அபிவிருத்தித் திட்டங்களுக்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் ஒன்பது கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனவென, பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

இத்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் உப குழுக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புக் குழு, கிராம சேமிப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக் குழு, நிதி மற்றும் கொள்வனவுக் குழு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி குழு, சமூகக் கணக்காய்வு குழு என ஐந்து உப குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டு, இதனூடாக வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிராமசக்தி செயற்றிட்டம், ஒரு கிராமத்தின் வாழ்வாதாரத்தை முன்னுரிமைப்படுத்தியே அமைந்துள்ளதுடன், தெரிவுசெய்யப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகளுக்கு தலா 80 இலட்சம் ரூபாய் நிதி செலவிடப்படவுள்ளது.

வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களின் வருமான மட்டத்தை உயர்த்துதல்; வேலைவாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளின் அறிவு, மனப்பாங்கு, ஆற்றல்களை விருத்தி செய்து, தொழில் வாய்ப்புகளில் ஈடுபடுத்தல்; உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்; கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்; சமுதாய நலனை இலக்காகக் கொண்டு, மக்கள் சக்தி இயக்கம், சேமிப்பு, முதலீட்டை மேம்படுத்தல் போன்றவை இதன் குறிக்கோள்களாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X