2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Freelancer   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் முதியவர் ஒருவர் தனித்திருந்த வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று நள்ளிரவில் பெட்ரொல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் சுற்று மதில் மீது ஏறிப் பாய்ந்து வீட்டுன் முகப்புப் பகுதியல் பெட்ரொல் ஊற்றி தீ மூட்டப்பட்டுள்ளது.

இதன் போது வீட்டின் முகப்பு கதவு, மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன.

முகத்தை துணியால் மூடி கட்டியவாறு தலைக்கவசம், மழைக் கவசம் என்பனவற்றை அணிந்து மர்ம நபர்களால் இந்த  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நள்ளிரவில் சம்பவம் பதிவாகிய நேரம் சுதாகரித்துக் கொண்ட முதியவர் அயலவர்களை அழைத்த போது தாக்குதல் தாரிகள் தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பல் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .