Princiya Dixci / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகள், அவர்களது வீடுகளுக்கு, தபால் திணைக்களத்தினூடாக இன்று (20) முதல் விநியோகிக்கப்பட்டு வருவதாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜே.எம். ஜவாஹிர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை விநியோகிக்குமாறு, சுகாதார அமைச்சால் விடுத்துள்ள சுற்றுநிரூபத்துக்கமைய மருந்து விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
எனவே, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கிளினிக் பதிவு உள்ள நோயாளர்கள், 0672052068 / 0771981879 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை முற்பகல் 08 மணி தொடக்கம் பிற்பகல் 04 மணி வரை தொடர்புகொண்டு, மருந்துப் பொதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென, டொக்டர் ஜே.எம். ஜவாஹிர் தெரிவித்தார்.
கிளினிக் இலக்கம், பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் போன்றவற்றை அறியத்தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026