Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 18 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், எம்.எஸ்.எம்.ஹனீபா
கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு புதிதாக 420 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பதில் உதவிச் செயலாளர் ஏ.ஜீ.முஹம்மட் பஸால், இன்று (18) தெரிவித்தார்.
தேசிய கல்வியல் கல்லூரிகளில் 2016/2018ஆம் கல்வியாண்டு கல்வி கற்று வெளியேறிய டிப்ளோமாதாரர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளரால் இன்று 18ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மூலம் 287 ஆசிரியர்களும் சிங்கள மொழி மூலம் 92 ஆசிரியர்களும் ஆங்கில மொழி மூலம் 41 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்புதிய ஆசிரியர், வலயக் கல்வி பணிப்பாளர்களிடம் நியமன கடிதத்தைப் பெற்று, உரிய பாடசாலைகளில் கடமை ஏற்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
51 minute ago
04 Jul 2025