Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 09 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
கிழக்கு மாகாணசபையினுடைய நிதி ஒதுக்கீடுகளிலும் ஆட்சி அதிகாரங்களிலும், தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறும் அமைச்சர் மனோ கணேசனால், குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிருபிக்க முடியுமா? என, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் சவால் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபைக் கட்டடத்திழல், நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கிழக்கு மாகாணத்தில், அபிவிருத்தியில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறுபவர்கள், இனவாதத்தைத் தூண்டி, அரசியல் செய்யும் காலாசாரத்திலிருந்து இன்னும் முழுமையடையவில்லை என்ற யதார்த்தை நிருபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
“தற்போது வந்துள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, சிறுபான்மை சமூகத்தினருடைய மாகாணங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம் பறிக்கப்படாமல் இருக்குமானால், கிழக்கு மாகாணசபை ஆதரிப்பதற்கு தயாராக உள்ளது.
“கிழக்கு மாகாண ஆட்சி மிகவும் சிறந்த முறையில், நல்லாட்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பதவிகளை நோக்கி, மாகாணம் நகர்த்தப்படவில்லை. மாகாணத்தில் தற்போது எந்தவித இனமுரண்பாடுகளும் இல்லை. ஒட்டுமொத்தமாக, பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகளை நோக்கி மாகாணசபை ஆட்சி முன்னெடுக்கப்படுகிறது.
“20ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பறிக்கப்படும் என்ற விடயம் திருத்திமைக்கப்பட வேண்டும் என்பதில், கிழக்கு மாகாணசரபை உறுப்பினர்கள் தெழிவாக இருக்கின்றோம். இது தொடர்பாக பல திருத்தங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் சமர்பித்துள்ளேன்.
“இந்நாட்டில் அரசியல் யாப்பு உருவாக்கப்படவுள்ளது. இது சிறுபான்மை சமூகத்தினருக்கு மிக முக்கியமான விடயம். புதிய அரசியலயாப்பில் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைகள் அபிலாசைகள் உள்வாங்கப்பட்டு பரிபூரணப்பட்டு வரும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது.
“பாரிய யுத்தம் நடைபெற்றதன் பின்பும், மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களைப் பார்க்கும் போது, மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளன. நல்லாட்சி கொண்டுவரப்படும் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் கூறியுள்ளார்கள்.
“அரசியல் ரீதியாக சிறுபான்மை சமூகம் விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் தீர்வைப் பெறவேண்டிய பொறுப்பு உள்ளது. இல்லாவிட்டால் தீர்வுகள் இழுத்தடிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட சமூகங்களாக சிறுபான்மை இனம் தள்ளப்படலாம்.
“எனது பார்வையில் பல விடயங்கள் இழுத்தடிக்கப்பட்டுள்ளன. ஒரு வருடத்துக்குள் தீர்வைத் தருவோம் என்ற சொல்லிவந்த அரசாங்கம் இரண்டரை வருடங்கள் கடந்த பின்பும் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க முடியாத நிலையில் உள்ளது. அவற்றை இராஜதந்திர ரீதியில் பெற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
32 minute ago
58 minute ago