Yuganthini / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு, பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஏ. அப்துல் வாசித் கோரிக்கை விடுத்தார்.
அத்தோடு, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டாமல் இருப்பதையிட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமது விசனத்தையும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (11) அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பொத்துவில் பிரதேச பிரிவுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்,கடந்த மூன்று மாத காலமாகக் கூட்டப்படாமல் இருப்பது பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பெரும் தடையாக உள்ளது.
“பொத்துவில் மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வு காண்பதற்கு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறாமல் இருப்பதால் வன இலாகா திணைக்களம், கரையோரம் பேணல் திணைக்களம், மீன்பிடி திணைக்களம் சார்ந்த பிரிவுகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் உள்ளது. இதனால் பொது மக்கள் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்கொண்டுள்ளனர். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026