2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கைவிடப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு

Editorial   / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்புக் கடற்கரையில்  கைவிடப்பட்ட நிலையில் புதிய பல்வேறு வகையான துப்பாக்கி  ரவைகளை கடற்படையினர், இன்று (17) காலை மீட்டுள்ளனர்.

பிளாஸ்டிக் வடிவம்  ஒன்றில்   மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கரையொதிங்கிய   குறித்த துப்பாக்கி ரவைகள் புலனாய்வுத் தகவலுக்கமைய  கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தேடுதல் நடவடிக்கையை, கல்முனை கடற்படையினர்  மேற்கொண்டதுடன்,  துப்பாக்கி ரவைகள் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய வகையில் புதிதாக காணப்படுகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட  ரவைகளை கல்முனை  பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான பணிகளை கடற்படையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X