Editorial / 2020 மே 03 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான விரைவாக பயன்தரக் கூடிய உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, விவசாயத் திணைக்கத்தின் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் தெரிவித்தார்.
“கொரோனாவை தோற்கடிப்போம் - உணவு பற்றாக் குறையை வெற்றி கொள்வோம்” எனும் தொனிப்பொருளில் தேசிய உணவுச் சேவையை பூர்த்தி செய்வதற்காக 2020 சிறுபோகத்தில் விரைவாக பயன்தரக் கூடிய பயிர் நடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கூறினார்.
மிளகாய், கௌபி, பாசிப்பயறு, நிலக்கடலை ஆகிய விதைகள் விவசாய போதனாசிரியர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் சுமார் 02 ஆயிரம் ஏக்கரில் இப் பயிர்ச்செய்கைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இம் மானியத் திட்டத்தில் உள்வாங்கப்படுவார்களெனவும் கூறினார்.
இதன் முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் மிளகாய், பாசிப்பயறு, நிலக்கடலை, கௌபி போன்ற பயிர்கள் செய்கை பண்ணப்படவுள்ளதாகவும், தெரிவித்தார்.
5 minute ago
11 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
33 minute ago