Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான நிரந்தர கணக்காளர் நியமனம் தொடர்பில் தோளோடு தோள் நின்று பாடுபட்டுழைத்த அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும் பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பில் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டோர் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
அக்கரைப்பற்றிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நேரில் நேற்று சந்தித்த அவர்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை தொடர்பிலும் ஆராய்ந்தனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி உண்ணாவிரத்தை மேற்கொண்டவர்கள் சார்பில் கிழக்கு குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த குருக்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சா.சந்திரசேகரம் (ராஜன்) ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது பிரதேச செயலகத்தின் கணக்காளர் நியமனத்திற்காக தானும் தமது கட்சியும் முன்னெடுத்த நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கமளித்ததுடன் அதற்கான ஆவணங்களையும் சந்திப்பில் கலந்து கொண்டவர்களிடம் காண்பித்தார்.
மேலும் எதிர்காலத்திலும் பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago