2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கூட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 05 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனைப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்; எதிர்வரும் 07ஆம் திகதி காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளதாக அப்பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீமின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், கடந்த வருடம் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகள் மற்றும் எதிர்காலத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனைப் பிரதேசங்களில் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பான மும்மொழிவுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட திணைக்களத் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X