Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Gavitha / 2016 மார்ச் 21 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட குடியிருப்பு முனைக் கிராமத்தில் குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இதனால் குறித்த பகுதியிலுள்ள மக்கள் பல்வேறு அசௌரிகங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக, அப்பகுதியிலுள்ள கிணறுகளில் நீர் வற்றியுள்ளதாகவும் நீரைப் பெற்றுக்கொள்வதற்காக நாவிதன்வெளி 7ஆம் கிராமம், அன்னமலை போன்ற கிராமங்களை நாடவேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த பகுதியிலுள்ள ஆற்றிலேயே மக்கள் குளிக்கின்றனர். எனினும் குறித்த ஆற்றில் கழிவுப்பொருட்கள் வீசப்படுவதனால், ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
'நாவிதன்வெளிப் பகுதிக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பினால் குழாய்நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதுடன் அதற்கான வேலைகளை துரிதப்படுத்தி குடியிருப்பு முனைக்கிராமத்துக்கு நீர் வழங்கவேண்டும்' என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பாக நாவிதன்வெளிப் பிரதேசசபையின் செயலாளர் எஸ்.இராமக்குட்டியிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) வினவிய போது, 'குடியிருப்பு முனைக்கிராமத்துக்கு தற்போது பவுசர் மூலம் குடிநீர் வழங்குவற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது' என்று கூறினார்.
குறித்த கிராம மக்கள் பிரதான தொழிலாக விவசாயம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .