2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Niroshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை அல்-ஹிதாயத் சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லா தலைமையில் நேற்று (14)பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக வர்த்தகர் என்.எம்.அஷ்ரப்,விஷேட அதிதியாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்தனர்.

இந்த நிகழ்வில்  மருதமுனை அல்-ஹிதாயத் சமூக நலன் அமைப்பின் தலைவர் நாமிக் நஸிர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை,பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப் தலைமையில் நேற்றுறு(14)பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சமூக சேவையாளரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய ஏ.அப்துல் ஹமீட்,அவரது பாரியார் சுபைதா ஆகியோர் பிரதமஅதிதிகளாகக் கலந்துகொண்டு சித்திப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிவைத்தனர்.

மேலும் அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப்,ஆசிரியை திருமதி. உம்முல் பரீதா அபூதாலிப் ஆகியோருக்கும் பாடசாலைக்கும் பரிசுப்பொதிகளை ஏ.அப்துல் ஹமீட்,அவரது பாரியார் சுபைதாஆகியோர் வழங்கினார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X