2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

குறைந்த வளங்களைக் கொண்டு உச்ச பயன்களைப் பெற பழக வேண்டும்: தவம்

Thipaan   / 2016 ஜனவரி 02 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.அறூஸ், பைஷல் இஸ்மாயில்

நம்மிடம் உள்ள குறைந்த வளங்களைக் கொண்டு உச்ச பயன்களைப் பெற அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும். வழங்கப்படும் பொருட்கள் சிறந்த முறையில் பயன்பாட்டுடையதாக்கி அதன் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கான வேலைகளை மேற்கொள்ள வேண்டும்  என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை செயலாளருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில், கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புக்கள் வழங்கும் நிகழ்வு இன்று (02) நடைபெற்றது.

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் எஸ்.எம்.றமீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிவேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

வருமானம் குறைந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம், இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட வறிய 50 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக இப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இப்பொருட்களை நீங்கள் விற்று விடாமல், இதனை பயன்படுத்தி வருமானம் ஈட்டும் தொழில்களை செய்வதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதனைக் கொண்டு உச்ச பயன்களைப் நீங்கள் பெறுவதற்காகதான் இப்பொருட்களை நாங்கள் வழங்கி வைத்தோம்.

நமது பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் வீகிதாசாரம் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் கடந்த காலங்களில் இஸ்லாமிய பெண்களுக்கு பிள்ளைப் பேற்றைக் குறைப்பதற்காக சிலர் சதி திட்டங்களை தீட்டி வேறுவடிவில் ஊசிகளைப் போட வைத்தனர்.

இவ் ஊசிகளின் தாக்கம் காலப் போக்கில் பிள்ளைகளின் பிறப்பு வீதத்தை குறைவடைய வைத்துள்ளது.

குறிப்பிட்ட ஊசிகளைப் போட வேண்டாம் என நமது இஸ்லாமிய அமைப்புக்கள் அந்த நேரத்தில் பலமுறை அறிவித்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம் பொருளாதார உத்தியோகத்தர் எம்.றியாஸ் உட்பட மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ஐ.றியாஸ்  என பலர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X