2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 ஜனவரி 21 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார், நடராஜன் ஹரன்

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு, வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்;று (20) காலை இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட 14 கிராமசேவகர் பிரிவுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட, கோழி வளர்ப்பைத் தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 130 பயனாளிகளுக்குத் தலா 14 கோழிக்குஞ்சுகள் வீதம் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

திருகோணமலை கால்நடைகள் சுகாதாரத் திணைக்களத்தினால் இக்கோழிக்குஞ்சுகள் தருவிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X