Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 மார்ச் 01 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் வான் ஒன்று மோதியதில் உயிரிழந்த சிறுவனின் சடலம் குடும்பத்தினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் நேற்று விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வீட்டின் கதவு தற்செயலாக திறந்த நிலையில் வீதியை நோக்கி ஓடியுள்ளான்.
இதன்போது, அவ்வழியால் வந்த பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் வான் மோதியதில் படுகாயமடைந்த சிறுவன் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பெரிய நீலாவணை விஷ்ணு வித்தியாலய வீதியை சேர்ந்த 4 வயது மதிக்கத்தக்க அருணா ஹர்ஷான் என தெரிவிக்கப்படுகின்றது
விபத்தின் போது சிறுவனின் சகோதரியை ஏற்ற வந்த வான் அவன் மீது மோதி ஒரு பக்க நெஞ்சு பகுதியில் ஏறிச் சென்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கலமுனை ஆதார வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. R
10 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago