Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜூலை 29 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அம்பாறை மாவட்டத்தில், திங்கட்கிழமை (29) கலந்து கொள்ள இருந்த எட்டு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு பாடசாலைகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் அறைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகளே இவ்விதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாசவின் இணைப்பாளர் வி. வினோ காந்த் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வுகள், முன் கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளுக்கமைவாக இந் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.
அதாவது தேர்தல் ஆணையகத்தினால் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பிற்பாடு இத்தகைய நிகழ்வை நடத்துவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும் என்ற காரணத்தினால் இது ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
அம்பாறையில் இருந்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்ற முறைப்பாட்டை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நடைமுறை விதிகளுக்கு அமைவாக இந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார்.
8 minute ago
10 minute ago
24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
24 minute ago
36 minute ago