2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சட்டக் கல்லூரி அனுமதிக்கான இலவச கருத்தரங்கு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டபீடம், இலங்கை சட்டக்கல்லூரி அனுமதிக்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கு டி.எம்.கே.அஸோஸியேட்ஸ் முற்றிலும் இலவசமாக ஒழுங்கு செய்துள்ள விசேட வழிகாட்டல் கருத்தரங்கு, சாய்ந்தமருதில் எதிர்வரும் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கு, “சட்டத்துறைக்கு இளம் தலைமுறையினரைத் தயார் செய்வோம்” எனும் தொனிப்பொருளில், இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்ட பீடத்துக்கும் இலங்கை சட்டக் கல்லூரிக்கும் கூடுதல் மாணவர்களை அனுப்பத் தயார்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழிமூலம் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் எப்பாகத்திலிருந்தும் எந்தவொரு மாணவரும் இதில் பங்குபற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விரும்புவோர் 0775746881 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பதிவு செய்யுறும் கேட்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .