வி.சுகிர்தகுமார் / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரச சுற்றுநிருபங்களுக்கு அமைய, சமுர்த்தி வங்கியியை வினைதிறன் மிக்கதாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள், அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கியால், பயனாளிகளுக்கு, வாகனங்கள் கடன் அடிப்படையில் பெற்றுக் கொடுக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம், கண்ணகி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு ரூபாய் 270,000 பெறுமதியான மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
வாழ்வாதாரத்தை நோக்காக கொண்டு, அவரது வியாபார நிலையத்துக்குப் பொருட்களை பெற்றுச் செல்வதற்காக கடன் அடிப்படையில், இந்த மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கியின் முகாமையாளர் கே. அசோக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்துகொண்டு மோட்டார் சைக்கிளை வழங்கி வைத்தார்.
2 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago