2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சமூக இடைவெளியைப் பேணி பொருள்கள் கொள்வனவு

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் இன்று (16) காலை 06 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்த நிலையில், மக்கள், நகரங்களுக்குச் சென்று தமது அன்றாட அத்தியவசியத் பொருள்களை கொள்வனவு செய்வதற்காக வருகை தந்திருந்ததைக் காணமுடிந்தது.

அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய பிரதேசங்களில் மக்கள் பொருள்களை கொள்வனவு செய்வதற்கு சுறுசுறுப்புடன் காணப்பட்டனர்.
 
அக்கரைப்பற்று பொதுச் சந்தை, அதனுடன் இணைந்ததான வர்த்தக நிலையங்கள் கால வரையறையின்றி தற்காலிகமாக மூடப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி அக்கரைப்பற்று நீர் பூங்கா, அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் தற்காலிக சந்தை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களிலும், தற்காலிகமாக சந்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். உள்ளூர் போக்குவரத்துகள் சுமூகமாக இடம்பெற்றது. மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை சுகாதார நடைமுறைகைளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைப் பேணி கொள்வனவு செய்தனர்.

உணவுப் பொருள்களின் கட்டுப்பாட்டு விலையை கண்காணிப்பதற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் வர்த்தக நிலையங்களிலும், சந்தைகளிலும் கண்கானிப்பு நடவடிக்கைகளிலும், ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்கள் ஊரடங்கு காலத்தில் மரக்கறி, அத்தியவசிய உணவுப் பொருள்கள் நடமாடும் சேவை மூலம் மக்களின் காலடிக்குச் சென்று வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .