Editorial / 2021 ஒக்டோபர் 24 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்
அகில இலங்கை விவசாயிகள் சம்மேளன ஏற்பாட்டில் சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் ஜே.வி.பியினால் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஏ.எஸ்.எம். புஹாரி மற்றும் சம்மாந்துறை அகில இலங்கை விவசாயிகள் அமைப்பின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளருமான வை.பி.எம் நபாஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
விவசாயிகளுக்கான உரம் , கிருமிநாசினி கோருவதுடன் விவசாயக் காணிகள் அபகரிப்பிற்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அரசாங்கத்தின் போக்குகளை கண்டித்துகோஷங்களும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பாறை மாவட்ட அகில இலங்கை விவசாயிகள் அமைப்பின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த பியதிஸ்ஸ, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சம்மாந்துறைப் பிரதேச விவசாய அமைப்புக்கள் கலந்து கொண்டன.

5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago