2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சரஸ்வதி சிலையை திறந்து வைத்த அழகி

Freelancer   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

ஜக்கிய இராச்சியத்தின் 2021ஆம் ஆண்டுக்கான சர்வதேச அழகி செல்வி இவஞ்சலின் (evanjelin elchmanar) 9அடி உயரமான  சரஸ்வதி சிலையை இன்று திறந்து வைத்தார்.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியைச் சேர்ந்த செல்வி இவஞ்சலின் இலங்கை வந்திருந்தார். 
அவருடன் அவரது தாயார் சாந்தி ராஜகருணாவும் வருகைதந்துள்ளார்.

சரஸ்வதித் தாயின் சிலை திறப்புவிழா நாவிதன்வெளி - அன்னாமலை மகாவித்தியால அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது. 

முன்னதாக சிலையை இவஞ்சலின் திறந்துவைக்க சிலைக்கான நினைவுப்படிமக்கல்லை அவரது தாயார் சாந்திராஜகருணா திரைநீக்கம் செய்துவைத்தார்.

சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளரும் பாடசாலைஇ ணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கௌரவ அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .