2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

சர்வதேச கிராமியப் பெண்கள் தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா,அஸ்லம் மௌலானா,பி.எம்.எம்.எ.காதர்

இலங்கைக்கான சர்வதேச கிராமியப் பெண்கள் தின நிகழ்வு வியாழக்கிழமை (15) காரைதீவில் நடைபெற்றது.
மனித அபிவிருத்தி ஸ்தாபனம், காரைதீவுப் பிராந்திய விவசாயத் திணைக்களம், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியன இணைந்து இத்தினத்தைக் கொண்டாடின.

வீதி நாடகம், பேரணி, ஒன்றுகூடல் என 03 கட்டங்களாக நிகழ்வு நடைபெற்றது.

செயற்கைப்பசளை, கிருமிநாசினி போன்றவற்றால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மனிதன் உண்பதால் ஏற்படும் தீங்குகள், அவற்றினால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பு, அதன் மூலமான தீங்குகள் என்பவற்றை உணர்த்தும் வீதி நாடகம் காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம், கல்முனை பொது பஸ் நிலையம் போன்ற இடங்களில் நடித்துக் காண்பிக்கப்பட்டது.

மேற்படி விடயங்களை உணர்த்தும் விதமான பெண்கள், மாணவிகளை உள்ளடக்கிய மாபெரும் பேரணி ஒன்றும் நடைபெற்றது.இறுதியில் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் ஒன்றுகூடல் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X