Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளும் சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கல்விமான்களும், கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை, ஆளுநர் செயலகத்தில் வைத்து அண்மையில் சந்தித்தனர்.
தங்களின் பிரதேசம் நீண்டகாலமாக அபிவிருத்திப் பணிகளில் புறக்கணிக்கப்பட்டதாகவும், மக்களின் வேண்டுகோளுக்கு அமைய, ஒரு நகரசபைக் கோரிக்கையை முன்வைத்த நாளிலிருந்து, அரசியல்வாதிகளால் தாம் புறக்கணிக்கப்பட்டதாகவும் இதனால் பிரதேசம் அபிவிருத்திகளில் பின்தங்கியுள்ளதாகவும், அவர்கள், இதன்போது ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
அத்துடன், கல்வி, அபிவிருத்தி, சுகாதாரம், வைத்தியம், விளையாட்டு சுற்றுலா போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த விடயங்களை செவிமடுத்த ஆளுநர், இவற்றுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளைச் செய்து, கல்வி உள்ளிட்ட துறைகளுடைய முன்னேற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தார்.
அத்தோடு, இவ்விடயம் தொடர்பான செயலாளர்கள், பணிப்பாளர்கள், சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்து, குறிப்பிட்ட பிரதேச அறிக்கைகளை உடனடியாகச் சமர்பித்து, மேற்படி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறும் ஆளுநர் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
4 hours ago