2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சிறந்த வியாபாரிகள்: விண்ணப்பம் கோரல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், வியாபார அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன், கிழக்கு மாகாணத்திலுள்ள சிறந்த வியாபாரிகளை தெரிவு செய்து விருது வழங்குவதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக, அம்பாறை உதவி பிரதேச செயலாளர் பீ.எம்.எம். அன்சார் தெரிவித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர வியாபாரத் தொழில் முயற்சியாளர்கள், இதில் கலந்துகொள்ள முடியும்.

விண்ணப்பிக்க விரும்பும் தொழில் முயற்சியாளர்கள், தத்தமது மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகங்களில், இதற்கான விண்ணப்பங்களைப்  பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், அம்பாறை எனும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு 063 2233 435 மற்றும் 076 3000 643 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

பரிசளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் 19ம் திகதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .