Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 மார்ச் 09 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தியில் மற்றுமோர் மயிற்கல்லாக சிறுபிள்ளை விசேட வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சிறுபிள்ளை விசேட வைத்திய நிபுணரான டொக்டர் எஸ்.கமலதீபன், வாரத்தில் மூன்று நாள்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பொருட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் வழங்கி வைத்தார்.
குறித்த வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். இச்சந்தர்ப்பமானது இப்பிரதேச மக்களுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும். இதனால் இங்குள்ள மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.
அதேவேளை, திருக்கோவில் வைத்தியசாலைக்கு புதிய அம்பியூலன்ஸையும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் றிபாஸ் அண்மையில் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago