Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கடந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 9,600 சம்பவங்கள் பதிவாகியுள்ளனதென, சட்டத்தரணி எம்.ஏ.சி. முஹம்மட் உவைஸ் தெரிவித்தார்.
றூவிஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை ஒஸ்றா மண்டபத்தில் நேற்று (22) நடத்தப்பட்ட சிறுவர் தொடர்பாக கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், அவர் இத்தகவலை வெளியிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்களில் 70 சதவீதமானவை, குடும்ப உறவினர்களாலேயே ஏற்படுத்தப்படுகின்றன.
“வறுமை மற்றும் பெண்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்ற காரணங்களாலேயே, அதிகளவிலான சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு என்பனவற்றிலும் இது அதிக தாக்கம் செலுத்துகின்றது.
“இலங்கையின் கல்வி அறிவுச் சுட்டன் உயர்ந்த நிலையில் அமைந்துள்ள போதிலும் சுமார் 50,000 சிறுவர்கள் அறவே பாடசாலைக்குச் செல்லாதுள்ளனர். மேலும் 450,000 சிறுவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகி நிற்பதாகவும் யுனிசெப் நிறுவம் தகவல் தெரிவிக்கின்றது.
“இலங்கையில் 2016ஆம் ஆண்டில் 2,036 வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 350 சம்பவங்கள் மட்டுமே 16 வயதுக்கு மேற்பட்டவைகளாகும். ஏனையவைகள் சிறுவர் தொடர்பானவையாகவும் 68 சதவீதமானோர் தங்களது விருப்பத்துடனேயே ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago