2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பொருட் கொள்வனவில் ஈடுபட்ட மக்கள்

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்டத்தில், இன்று (16) காலை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில், சமூக இடைவெளியை பேணாது மக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர் என்று தெரியவருகிறது.

சதொச உள்ளிட்ட முக்கிய வியாபார நிலையங்களில் பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபட்டதன் காரணமாக அங்கு வருகை தந்த மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்திருந்தனர்.

எனினும் பொது இடங்களில், மக்கள் சமூக இடைவெளியை பேணவில்லை என்றுச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இது இவ்வாறிருக்க சந்தையில் மரக்கறிகளின் விலையில் தளம்பல் நிலை காணப்பட்டதாகவும் சில இடங்களில் அதிகமான விலைக்கும் சில இடங்களில் நியாயமான விலைக்கும் மரக்கறி உள்ளிட்ட சில பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X