Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அட்டானைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எம்.இஸ்மாயில், இன்று (22) தெரிவித்தார்.
ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பாவனைக்கு உதவாத உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களால் முறையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸின் ஆலோசனைக்கமைய, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்கள், பேக்கரிகள் என்பன திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
உணவு சட்ட விதிமுறைகள், நுகர்வோர் விவகார சட்டங்கள் மற்றும் அதன் விதிமுறைகளுக்கு அமைய வேண்டுமெனவும், உணவு தயாரிப்போர், உணவு விநியோகிக்கும் இடம், பயன்படுத்தும் உபகரணம் போன்றவற்றின் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும், உணவகங்களில் பணியாற்றுபவர்கள் முகக்கவசம், கையுறை போன்றவற்றை பாவிக்க வேண்டுமென கேட்டுள்ளார்.
உணவு பாதுகாப்பு சட்ட திட்டங்களை மீறுபவர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு, பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் கண்டுபிக்கப்பட்டால், அதன் உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்நிலையங்கள் மூடப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026