எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய ரீதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி, அதனூடாக பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை நடவடிக்கை எடுத்துள்ளாரென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஐ.எச்.ஏ.வஹாப் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நாவிதன்வெளி பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக நாவிதன்வெளி மூன்றாம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ். ஜெஸ்மிரை ஆதரித்து, சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எஸ். நபீர் தலைமையில் நேற்று (18) மாலை நடைபெற்ற நிகழ்வில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைப்பாளர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“எதிர்வரும் உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பாக இளம் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
“இவர்களைப் பலப்படுத்துவதன் ஊடாக பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாட்டைத் தனியாக ஆளக் கூடிய நிலமையை ஏற்படுத்த முடியும்” என்றார்.
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago