2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சொகுசு காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது

Editorial   / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை, கல்முனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில், அதி சொகுசு காரில் கேரளா கஞ்சாவை கடத்திய இருவரை, நேற்று (23)  கல்முனை பொலிஸார் கைது செய்தனர்.

நீண்ட காலமாக  கேரளா கஞ்சா வாகனங்களின் மூலம் கடத்தப்பட்டு விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, கல்முனை  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பெரியநீலாவணை பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு காவலரணில் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், பொலனறுவை பகுதியில் இருந்து பொத்துவில் நோக்கி ஹொன்டா ரக அதி சொகுசு காரில் 10 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா பொதிகளுடன் பயணம் செய்த இரு சந்தேகநபர்களே கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 3 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம், 4 கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட சான்றுப் பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இவ்வாறு   கைதாகிய 27 மற்றும் 28 வயதுடைய சந்தேகநபர்கள் உட்பட மீட்கப்பட்ட  சான்று பொருட்கள்   பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து  செல்லப்பட்டு  மேலதிக விசாரணைகளை  கல்முனை  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X