Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, கோமாரி விவசாயப் போதனாசிரியர் பிரிவின் பெரும்போகச் செய்கைக்கான கலப்பினச் சோளம், மிளகாய் அறுவடை விழா, இன்று (21) நடைபெற்றது.
விவசாயத் திணைக்களத்தின் உதவியுடன் சேனைப் பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கான விதைகள், மானிய விலையில் வழங்கப்பட்டு, விவசாயப் போதனாசிரியர்களின் மேற்பார்வையில் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு, அறுவடை வயல் விழா கோமாரி, களுகொல்ல, காட்டுமடு ஆகிய பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றன.
விவசாயப் போதனாசிரியர் எஸ்.சித்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி விவசாயப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.பி. திஸாநாயக்க, உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.ஐ. இஸ்மாலெவ்வை, விவசாயப் போதனாசிரியர் (தலைமைப் பீடம்) எஸ்.எல்.எம். சல்மான், பாட விதான உத்தியோகத்தர்கள்? பிரதேச விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் சேனைப் பயிர்ச்செய்கையை அதிகரிக்கும் பொருட்டு, சிறந்த முறையில் பயிர்ச்செய்கையை முன்னெடுத்து வரும் விவசாயிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கான விவசாய உபகரணங்களும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago