2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சுகாதாரத்தைப் பேணாதவை மீது நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 28 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

சுகாதாரத்தைப் பேணாத வகையில் இயங்கும் உணவகங்கள், தேநீர்க் கடைகள், பழக் கடைகள், பலசரக்குக் கடைகள் உள்ளிட்டவை கண்டறியப்படுமாயின், அவற்றின் உரிமையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கரைப்பற்றுப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர் தெரிவித்தார்.

தேசிய உணவுப் பாதுகாப்பு வாரம்  திங்கட்கிழமை முதல் ஒருவார காலத்துக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையிட்டு அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில்  விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

இந்த வேலைத்திட்டத்தின்போது தேநீர்க் கடைகள், உணவகங்கள், பலசரக்குக் கடைகள், பழக் கடைகளும் அவற்றின் சுற்றுப்புறச் சூழலும் அவதானிக்கப்பட்டு, சுகாதாரத்தைப் பேணாத உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

சுகாதாரமான முறையில் உணவுகளைக் கையாள வேண்டும்;, கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்,  உணவுகள் தயாரிக்கும் அல்லது சேகரித்து வைக்கும் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருத்தல் ஆகியவை பற்றியும் விழிப்புணர்வூட்டப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X