2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

செங்கல் உற்பத்தித் தொழிற்சாலைகளை அகற்றுமாறு எச்சரிக்கைக் கடிதம்

Thipaan   / 2016 நவம்பர் 20 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நெய்னாகாடு கிராமத்தில் நீண்டகாலமாக இயங்கி வரும் செங்கல் உற்பத்தித் தொழிற்சாலைகளை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்பட்டுவருவதாக, சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி எம்.எம். சாபீர், இன்று ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார்.

எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தொழிற்சாலைகளை அகற்ற வேண்டுமெனவும் அவ்வாறு அகற்றாதவர்களுக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும்  அவர் கூறினார்.

நெய்னாகாடு கிராமத்தில் நீண்ட காலமாக இயங்கி வரும் செங்கல் உற்பத்தி தொழிற்சாலைகளால், அங்கு வாழும் மக்கள், காச நோய், கண் நோய் மற்றும் தோல் நோய்களுக்கு உள்ளாகி வருவதோடு, குடிநீரும் மாசடைந்து காணப்படுவதால் பெரும் சுகாதார சீர்கேட்டை எதிர்கொள்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

இத்தொழிற்சாலைகளை வேறிடத்துக்கு மாற்றுமாறு சம்மந்தப்பட்டவர்களிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், அதை அவர்கள் உதாசீனம் செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

கடந்த வாரம் நடைபெற்ற சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய இச்தொழிற்சாலைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்தியதிகாரி அலுவலகம் மற்றும் சுற்றாடல பேணும் திணைக்களம் என்பன ஒன்றினைந்தே, இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .