2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சூதாடியவர்கள் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 10 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று மாநகரசபை பொதுச் சந்தைக் கட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐவர், நேற்று சனிக்கிழமை (09) இரவு 8.30க்கு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பணமும் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த கட்டடத்தில் மாடிப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை (10) பொலிஸ் பிணையில் விடுவித்து நாளை  திங்கட்கிழமை (11) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X