Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் சுய தொழிலில் ஈடுபடும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, பெண்களுக்கான மா அரைக்கும் இயந்திரங்கள் இன்று வெள்ளிக்கிழமை (21) வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி விவசாய விரிவாக்கல் நிலையத்தில் வைத்து, காத்தான்குடி விவசாய போதானிசிரியை குந்தவை ரவிசங்கரினால், இந்த வாழ்வதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது கருத்து தெரிவித்த காத்தான்குடி விவசாய போதானிசிரியை, 'காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில், பல்துறை சார் போசாக்கு திட்டத்தினூடாக, சுய தொழிலை மேற்கொள்கின்ற தெரிவு செய்யப்பட்ட 14 குடும்ப பெண்களுக்கு மா அரைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மா அரைக்கும் இயந்திரமும் 18,350 ரூபாயாகும். அதே போன்று இரண்டு குடும்பங்களுக்கு மிளகாய் அரைக்கும் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரம் ஒவ்வொன்றும் 35,000 ரூபாயாகும்.
இதற்கான பயனாளிகளை, சிறுகைத்தொழில் அபிவிருத்தி திணைக்களம், கிராம உத்தியோகத்தர்கள், விவசாய திணைக்களம், சமூக சேவை திணைக்களம் ஆகிய திணைக்களங்கள் தெரிவு செய்தது' என்று அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
17 May 2025