2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படின் அறிவிக்கவும்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 15 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி அச்சிறுவர்களின் கல்வியை பாதிப்படையப் செய்பவர்கள் யாராவது உங்களின் பிரதேசங்களில் இருந்தால், அவர்கள் தொடர்பிலும் அச்சிறுவர்கள் தொடர்பிலும் தமக்கு அறிவிக்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.அன்வர் கேட்டுக்கொண்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கை, அப்பிரதேச செயலக சமூர்த்தி வங்கியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'உங்களின் பிரதேசங்களில் பாடசாலைகளிலிருந்து  இடைவிலகிய சிறுவர்கள் யாராவது வீடுகளில் வேலைக்கோ அல்லது கடைகளில் வேலைக்கோ அமர்த்தப்பட்டிருந்தால், வேலைக்கு அமர்த்தியவர்கள் தொடர்பிலும் அச்சிறுவர்கள் தொடர்பிலும் எங்களுக்கு உடனடியாக அறிவிக்க முடியும். மேலும், கல்வி கற்க மறுக்கும் உங்களின் பிள்ளைகள் இருந்தால், அது தொடர்பிலும் எங்களுக்கு அறிவிக்கமுடியும். இவ்வாறு அறிவிப்பதில் தயக்கம் இருந்தால், மறைமுகமாக அறிவிக்க முடியும்' என்றார்.  

'மேற்படி விடயம் தொடர்பில் அறிவிக்காவிடின்,  அச்சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நீங்களே அவர்களுக்குச் செய்யும் துரோகமாக அமைந்துவிடும்.

அச்சிறுவர்களை உங்களின் பிள்ளைகளாக  நினைத்துக்கொண்டு நீங்கள் செயற்பட்டால், அச்சிறுவர்களை பாடசாலைகளில் மீண்டும் சேர்த்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பதில் தீவிர கவனம் செலுத்துவோம்.  

'பெற்றோர்; பிள்ளைகளின் பெற்றெடுப்பதில் மட்டும் இருக்காமல், அவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X