Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 19 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன், வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று தேசிய பாடசாலைக்கு இன்று சனிக்கிழமை (19) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மேற்கொள்ளவிருந்த விஜயம் திடீரென ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் 6 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மூன்று மாடி தொழில்நுட்ப ஆய்வு பீடம் மற்றும் இரு மாடி தொழில்நுட்ப ஆய்வு கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா பாடசாலைக் கட்டட தொகுதிக்கான அடிக்கல் நடுதல் ஆகிய நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் எம்.ஜ.மீராசாகிப் தலைமையில் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆய்வு கூடங்களை மாத்திரம் திறந்து வைத்ததுடன், பாடசாலைக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
எனினும், முன்னதாக நீச்சல் தடாகமும் திறக்கப்படுவதாக அறிவிந்திருந்தபோதிலும் இறுதியில் அது கைவிடப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், ஜனாதிபதியை இங்கு அழைத்து வருவதற்கு பல நாட்களாக பெரும் முயற்சி மேற்கொண்ட போதிலும் அவை கைகூடாததனையடுத்து கவலையும், கோபமும் அடைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் பிரதிநிதியாக அக்கரைப்பற்று மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .