2025 மே 03, சனிக்கிழமை

’தனிமைப் பிரிவுகளுக்குச் செல்லாதீர்’

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு, பொதுமக்கள் எவரும் செல்ல வேண்டமென, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன், இன்று (21) அறிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு, பாலமுனை 01ஆம் பிரிவு, ஒலுவில் 02ஆம் பிரிவு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்குமெனவும், இப்பிரிவுகளில் வாழும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாமெனவும், வர்த்தக நிலையங்கள் திறக்க முடியாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் 09 பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X